உளுந்தூர்பேட்டை பகுதியில் மணிலா பயிரில் களை எடுக்கும் பணி தீவிரம்

உளுந்தூர்பேட்டை, டிச. 19: உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மானாவாரி பயிராக மணிலா பயிரிட்டு இருந்தனர். தற்போது இரவு மற்றும் பகல் நேரத்தில் அடிக்கடி பெய்து வரும் மழையின் காரணமாக மணிலா பயிர் நன்கு வளர்ந்துள்ள நிலையில் தற்போது மணிலா பயிரில் உள்ள களைகளை எடுக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மணிலா பயிரில் அதிக மகசூலுக்காக களை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இயற்கை உரத்தை போட்டு வருகின்றனர். இதேபோல் திருநாவலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட கிராமங்களிலும் விவசாயிகள் களை எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் மழையினால் மகசூல் பாதிக்காத வகையில் போதிய பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகள் வழங்கிட வேண்டும் என விவசாயிகள் வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: