கொங்கணாபுரம் ஒன்றியத்தில் திமுகவினர் வேட்பு மனு தாக்கல்

இடைப்பாடி, டிச.18: இடைப்பாடி சட்டமன்ற தொகுதி கொங்கணாபுரம் ஒன்றியத்தில் 9 ஊராட்சிகள் உள்ளது. திமுக சார்பில் கோரணம்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு ராணி பெரிய தம்பி, கோனசமுத்திரம் ஊராட்சி தலைவர் பதவிக்கு சங்கீதா செல்வகுமார், கச்சுப்பள்ளி ஊராட்சி தலைவர் பதவிக்கு அண்ணாதுரை, எருமப்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு பழனிசாமி, தங்காயூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு மாதையன், சமுத்திரம் ஊராட்சி தலைவர் பதவிக்கு மரகதம் கணேசன் ஆகியோர் கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.நிகழ்ச்சியில் சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சுப்ரமணியம், நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளர் ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதி கந்தன். கொங்கணாபுரம் ஒன்றிய செயலாளர் பரமசிவம், முன்னாள் ஒன்றிய அவை தலைவர் சித்தையன், முன்னாள் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருணாசலம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: