×

ரயில்வே குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்ற வேண்டும் நகராட்சி அலுவலகத்தில் மனு

ராமேஸ்வரம், டிச. 12: ராமேஸ்வரம் ஸ்ரீராம்நகர், ரயில்வே குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் அகற்ற வலியுறுத்தி இப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனுக்கொடுத்தனர். ராமேஸ்வரம் பகுதியில் சமீபத்தில் பெய்த தொடர் மழையினால் பல்வேறு பகுதியில் மழை நீர் குளம்போல் தேங்கியுள்ளது. மக்கள் வசிக்கும் வீடுகள் அமைந்துள்ள குடியிருப்புகளிலும் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்களின் சகஜ வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தீவுப்பகுதி முழுவதும் நிலஊற்று எடுத்துள்ளதால் தேங்கிய மழை நீரை வெளியேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் தேங்கிய நீரில் கொசு உறபத்தியாக தொற்று நோய் பரவும் நிலை உருவாகியுள்ளதால் சுகாதாரத்துறையினர் கொசு மற்றும் நோய் தடுப்பு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ராமேஸ்வரம் ஸ்ரீராம் பகுதியில் வீடுகளை சூழ்ந்தும், இப்பகுதி செல்லும் வழியிலும் இரண்டு அடி ஆழத்திற்கு தேங்கிய மழை நீரை அகற்ற வலியுறுத்தி நேற்று ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகத்தில் இப்பகுதி மக்கள் கோரிக்கை மனுக்கொடுத்தனர். தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூ.கட்சி சார்பில் தாலுகா செயலாளர் சிவா தலைமையிலும் ஸ்ரீராம்நகரில் தேங்கிய மழைநீரை அகற்றவும், இப்பகுதியில் தெருவிளக்குகள் அமைத்து தரவும் நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

இதுபோல் ராமேஸ்வரம் ரயில் நிலைய வளாகத்திற்குள் அமைந்துள்ள ஊழியர்கள் குடியிருப்பு பகுதியிலும் அதிகளவில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில் ரயில்வே நிர்வாகம் மழைநீரை அகற்றுவதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இங்கு குடியிருக்கும் ஊழியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நகராட்சி அலுவலகத்திற்கு சென்று, ரயில்வே ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அலுவலரிடம் கோரிக்கை மனுக்கொடுத்தனர்.

Tags : office ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...