×

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிராமிய கலைகளை கற்றுத்தரும் ஆசிரியர் பெற்றோர், பொதுமக்கள் பாராட்டு

கமுதி, டிச. 11: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே ஆசிரியர் ஒருவர் பள்ளி மாணவர்களுக்கு ஏராளமான கிராமிய கலைகளை கற்றுத் தருவது, மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. கமுதி அருகே காத்தனேந்தல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர் விஜயராம். இவர் இப்பள்ளியில் பயிலும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பாடத்துடன், கிராமிய கலைகளான கரகாட்டம், கும்மியாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம் போன்ற கலைகளை கற்றுத் தருகிறார் இவரது கலைச்சேவையை பாராட்டி செங்கல்பட்டில் டிஜிட்டல் டீம் சார்பில் ஒளிரும் ஆசிரியர் விருதும், திருநெல்வேலி லயன்ஸ் கிளப் சார்பில் கல்விச் சிந்தனையாளர் விருதும் வழங்கப்பட்டுள்ளது. இந்த கலைச்சேவையை இப்பகுதி மக்கள் பெரிதும் வரவேற்று ஆசிரியரை பாராட்டி வருகின்றனர்.

இது குறித்து ஆசிரியர் விஜயராம் கூறியதாவது, ‘பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வியுடன், கலையையும் கற்றுத் தருவதால் ஆசிரியர் மற்றும் மாணவர்களிடையே இடைவெளி குறைந்து, கூச்சம் விலகி நன்றாக கற்கும் சூழல் உருவாக கலைகள் பயன்படுகிறது. மேலும் மாணவர்களின் வருகையை அதிகரிக்கவே தினமும் வகுப்பறையில் ஒரு கலை கற்றுத் தரப்படுகிறது. பொம்மலாட்டம் போன்ற கலைகள் மாணவர்களுக்கு கற்றுத்தரும் போது கற்றல் ஆர்வம் அதிகரிப்பதோடு, கலைகளும் அழிந்து விடாமல் புத்துணர்வு பெறுகிறது. கலைகளை முறையாக கற்பதற்காகவே அரசு பள்ளி ஆசிரியர்கள் இணைந்து தமிழ்நாடு ஆசிரியர்கள் கலைக்குழு என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் அந்தனை கலைகளையும் கற்று வருகிறோம். இதற்கு பள்ளியின் தலைமையாசிரியர் முத்துமுருகன் உறுதுணையாக இருப்பதாக கூறினார்.

Tags : Teacher Parents ,school ,
× RELATED பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் வகையில் ஒயிலாட்டம் அரங்கேற்றம்