சத்தி வாரச்சந்தையில் வெங்காயம் கிலோ ரூ.60க்கு விற்பனை

சத்தியமங்கலம், டிச.11: சத்தியமங்கலம் வாரச்சந்தையில் வெங்காயம் கிலோ ரூ.60க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டதால் தினசரி மார்க்கெட் வெறிச்சோடியது. சத்தியமங்கலத்தில் செவ்வாய்க்கிழமைதோறும் வாரச்சந்தை நடக்கும். இந்த வாரச்சந்தைக்கு சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து அன்றாட தேவைக்கான காய்கறிகள், மளிகை சாமான்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கிச்செல்வர். வாரச்சந்தை அருகே தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன்காரணமாக, காய்கறி கடைகளில் வெங்காயம் விற்பனை குறைந்தது. இந்நிலையில், நேற்று நடந்த சத்தியமங்கலம் வாரச்சந்தையில் சில கடைகளில் வெங்காயம் கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டது.ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனையான வெங்காயம் வாரச்சந்தையில் ரூ.60க்கு விற்பனையானதால் பெண்கள் ஆர்வத்துடன் வெங்காயத்தை போட்டிபோட்டு வாங்கிச்சென்றனர். ஆனால், தினசரி மார்க்கெட்டில் வெங்காயம் கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விலை கூறியதால் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது. வாரச்சந்தையில் வெங்காயம் கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் தினசரி மார்க்கெட்டிற்கு செல்ல ஆர்வம் காட்டவில்லை.

Advertising
Advertising

Related Stories: