பாப்பாகோவில் அரசு பள்ளியில் யானைக்கால் கண்டறியும் முகாம்

நாகை, டிச.11: நாகையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு யானைக்கால் நோய் கண்டறியும் முகாம் நடந்தது.தமிழகம் முழுவதும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் யானைக்கால் நோய் கண்டறியும் முகாம் நடந்து வருகிறது. இதன்படி நாகை வட்டாரம் சார்பில் பாப்பாகோவில் அரசு தொடக்கப்பள்ளியில் யானைக்கால் நோய் கண்டறியும் முகாம் நடந்தது. இதில் 1, 2வது வகுப்பை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு 10 நிமிடத்தில் யானைக்கால் நோயை ஏற்படுத்தும் பைலேரியா நோய் கிருமி தாக்கம் உள்ளதா என்று கண்டறியப்பட்டது.சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார். மாவட்ட பூச்சியியல் வல்லுநர் சுப்பிரமணியன் துணை இயக்குனர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: