விழுப்புரம் ஷோரூமில் டிரைல் பார்ப்பதாக கூறி பைக்கை அபேஸ் செய்த ஆசாமிக்கு வலை

விழுப்புரம்:  விழுப்புரம் ஷோரூமில் டிரைல் பார்ப்பதாகக் கூறி பைக்கை அபேஸ் செய்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் ஷோரூம் உள்ளது. இந்த ஷோரூமிற்கு நேற்று மாலை சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வந்தார். அவர் இருசக்கர வாகனங்களை வாங்குவதற்காக சிலவற்றை மாதிரி பார்த்தார். பின்னர் அந்த ஷோரூமில் இருந்த ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை வாங்க முடிவு செய்துள்ளதாகவும், வண்டியை ஓட்டி பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த ஷோரூமில் பணியில் இருந்த ஊழியர்கள் அவருக்கு வாகனத்தை ஓட்டி பார்க்க அனுமதி வழங்கினர்.

பின்னர் அந்த நபர் ஷோரூமின் முன்புற பகுதியிலிருந்து வாகனத்தை ஓட்டிக்கொண்டு விழுப்புரம் புதிய பஸ் நிலையம் மார்க்கமாக சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் ஷோரூமுக்கு வரவில்லை. வாகனத்துடன் அவர் தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் இதுகுறித்து விழுப்புரம் மேற்கு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு அந்த வாலிபரை தேடி வருகின்றனர். ஷோரூமில் பதிவான சிசிடிவி காட்சிகளை கொண்டு பைக்பை அபேஸ் செய்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: