தொடர் விபத்து ஏற்படுத்திய புளிய மரங்கள் அகற்றம்

ரிஷிவந்தியம், டிச. 10: ரிஷிவந்தியம் அருகே தொடர் விபத்துகளை ஏற்படுத்திய புளிய மரங்கள் அகற்றப்பட்டன. சங்கராபுரம் - திருக்கோவிலூர் பிரதான சாலை நெடுஞ்சாலை துறை சாலையாக உள்ளது. இந்த சாலையில் சங்கராபுரம் முதல் திருக்கோவிலூர் வரை சுமார் 20க்கும் மேற்பட்ட எஸ் அபாய வளைவுகள் உள்ளன. இந்த சாலை வழியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள், லாரிகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் நகரத்தை நோக்கி அப்பகுதி கிராமமக்கள் அதிக அளவில் செல்கின்றனர் .இந்த சாலையில் அதிகளவில் எஸ் அபாய வளைவுகள் உள்ளதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகளவில் ஏற்பட்டு வருகின்றன. சாலையின் இருபுறங்களிலும் புளிய மரங்கள் அதிகம் உள்ளன. இதனால் எதிரே வரும் வாகனங்கள் வளைவில் தெரியாமல் ஒருவருக்கொருவர் வாகனங்கள் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது.

இந்த சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து கடந்த மாதம் லாலாபேட்டை கிராமத்தை சேர்ந்த 4  பள்ளி மாணவர்கள் கடம்பூர் அடுத்த எஸ் அபாய வளைவு சாலையில் வாகனம் மோதி விபத்து ஏற்பட்டு பலியானார்கள்.

இதைத்தொடர்ந்து இந்த வாகன விபத்திற்கு முக்கிய காரணமாக இருந்த எஸ் அபாய வளைவு அருகில் இருந்த புளிய மரங்களை நெடுஞ்சாலை துறையினர் வேரோடு அகற்றி  அப்புறப்படுத்தினர். இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியும் அளவிற்கு புளிய மரங்கள் அகற்றப்பட்டதால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: