ஈரோடு மாவட்டத்தில் முதல் நாளில் 100 பேர் வேட்புமனு தாக்கல்

ஈரோடு, டிச.10:  தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது.  ஈரோடு மாவட்டத்தில் 19 மாவட்ட ஊராட்சி உறுப்பினர், 183 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்,  225 ஊராட்சித் தலைவர், 2,097 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று துவங்கியது. 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டது.

ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு 1, ஊராட்சித் தலைவர் பதவிக்கு 4, ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 95 என மொத்தம் 100 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒரு வேட்புமனு கூட தாக்கல் செய்யப்படவில்லை. வரும் 16 ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய கால அவகாசம் உள்ளது.

Related Stories:

>