×

கோழிக்கொண்டை அறுவடை... தேனி மாவட்டத்தில் க.மயிலை, ஆண்டிபட்டியில் முதற்கட்ட தேர்தல்

தேனி, டிச.9: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, க.மயிலாடும்பாறை ஒன்றியங்களில் முதல்கட்டத் தேர்தலும், பிற ஒன்றியங்களில் இரண்டாம் கட்டத் தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று வேட்புமனுத்தாக்கல் துவங்க உள்ளது.தமிழகத்தில் 9 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் டிச.27ம் தேதி மற்றும் டிச.30ம் தேதிகளில் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினம் முதல் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, க.மயிலாடும்பாறை, பெரியகுளம், தேனி, போடி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் ஆகிய எட்டு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் 10 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், 98 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்கள், 130 ஊராட்சி மன்றங்களுக்கான தலைவர் பதவியிடங்கள், 130 ஊராட்சிகளில் உள்ள 1161 வார்டு கவுன்சிலர் பதவியிடங்கள் என மொத்தம் 1399 பதவியிடங்களுக்கான தேர்தல் டிச.27 மற்றும் டிச.30 ம்தேதிகளில் இருகட்டமாக நடக்க உள்ளது. இதற்காக மாவட்டத்தில் 870 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

முதல்கட்டத்தேர்தல்தேனி மாவட்டத்தில் முதல்கட்ட தேர்தல் ஆண்டிபட்டி மற்றும் க.மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியங்களில் நடக்க உள்ளது. இவ்விரு ஒன்றியங்களில் உள்ள 3 மாவட்ட கவுன்சிலர்கள், 33 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், 48 ஊராட்சி மன்றத் தலைவர்கள், 417 கிராம ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் என மொத்தம் 501 பதவிகளுக்கு 285 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடக்க உள்ளது.2ம் கட்டத் தேர்தல்பெரியகுளம், தேனி, போடி, சின்னமனூர், உத்தமபாளையம்,கம்பம் ஆகிய ஆறு ஊராட்சி ஒன்றியங்களில் டிச.30ம் தேதி நடக்க உள்ளன. இதில் 7 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், 65 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், 82 ஊராட்சி மன்றத் தலைவர்கள், 744 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் என மொத்தம் 898 பதவிகளுக்கு 585 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடக்க உள்ளது.

தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று (டிச.9) காலை 10 மணி முதல் அன்றைய தினம் மாலை 3 மணி வரை வேட்புமனுத்தாக்கல் செய்யலாம். வேட்பு மனுத்தாக்கல் டிச.16ம் தேதி வரை செய்யலாம். வேட்புமனுக்களை திரும்ப பெற டிச.19ம்தேதி பிற்பகல் 3 மணி வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. 2ம் கட்ட தேர்தலும் நிறைவடைந்த பிறகு, வாக்கு எண்ணிக்கை 2020ம் ஆண்டு ஜன.2ம் தேதி காலை 8 மணிக்கு நடக்க உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் ஜன.6ம் தேதி அந்தந்த உள்ளாட்சி மன்றங்களில் பதவி ஏற்க உள்ளனர்.
இதனையடுத்து மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர்கள், 8 ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், 8 ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவர்கள், 130 ஊராட்சி மன்றத் துணைத் தலைவர்கள் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் ஜன.11ம் ேததி நடக்க உள்ளது.


Tags : Election ,Theni District ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...