×

தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு

 

தேனி, ஏப். 26: தேனி பைபாஸ் ரோட்டில் உள்ள புதிய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, கோவை, திருப்பூர், நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட வெளியூர்களுக்கு பஸ்கள் புறப்பட்டு செல்கின்றன. இதனால் தேனி நகரில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து பயணிகளும் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தே செல்கின்றனர். இதனால் இங்கு பயணிகள் கூட்டம் எப்போதும் உள்ளது.

இதில் நகராட்சியின் சார்பில் பஸ் நிலையத்தில் காண்டிராக்ட் விடப்பட்டுள்ள வணிக வளாகத்தில் கடை நடத்துவோர் பலர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை விட்டு பயணிகள் நடந்து செல்வதற்காக ஒதுக்கப்பட்ட நடைபாதைகளை முற்றிலுமாக ஆக்கிரமித்துள்ளனர்.  இதனால் பயணிகள் நடக்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் பஸ்களுக்காக பயணிகள் காத்திருந்தால், தங்கள் கடைகளுக்கு இடைஞ்சலாக நிற்க கூடாது என கடைக்காரர்கள் விரட்டும் அவலமும் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் பயணிகள் நடைபாதையை ஆக்கிரமித்துள்ள கடைகளை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு appeared first on Dinakaran.

Tags : Theni New Bus Stand ,Theni ,Theni Bypass Road ,Madurai ,Coimbatore ,Tirupur ,Nagercoil ,Kanyakumari ,Dinakaran ,
× RELATED தேனியில் இலவச மருத்துவ முகாம்