திண்டிவனம் அருகே சாலையோரம் கொட்டப்படும் உணவு கழிவுகளால் தொற்றுநோய் பரவும் அபாயம்

திண்டிவனம், டிச.  9: திண்டிவனம் அடுத்த சிறுவாடி  கிராமத்தில் சாலையோரத்தில் கொட்டபடும் உணவு கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. அப்பகுதியில் இருக்க கூடிய ஓட்டல், பாஸ்ட்புட் கடை, மளிகை கடை, கோழிக்கறி கடை உள்ளிட்ட கடைகளிள் இருந்து முட்டை தோல், இறைச்சியின் கழிவுகள், அழுகி போன பொருட்கள் ஆகியவை மொத்தமாக எடுத்து சென்று சாலையோரம் கொட்டுகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் செல்லும் பிரதான சாலை ஓரம் கொட்டப்படும் கழிவுகளாள் அதிகளவு துர்நாற்றம் வீசுகிறது.அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் முகம் சுளித்தபடி செல்கின்றனர். மேலும் தொற்றுநோய் பரவும் என பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். ஆகையால் உடனடியாக சாலை ஓரத்தில் உள்ள உணவு கழிவுகளை சுத்தம் செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: