சாராயம் விற்ற 2 பேர் கைது

மேல்மலையனூர், டிச. 5: அவலூர்பேட்டை  காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சாராயம் விற்கப்படுவதாக  போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு  சென்று சோதனை செய்தனர். அப்போது கோட்டப்பூண்டி கிராமம் புளியங்குளம்  அருகில் கீராந்தப்பட்டு கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி (54)  என்பவர் 5 லிட்டர் விஷ சாராயம் விற்பனை செய்த போது கைது செய்தனர். மேலும்  அதே கிராமத்தை சேர்ந்த கணேசன் (40) என்பவர் வீட்டின் பின்புறம்  பதுக்கி வைத்த 5 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர்.

Related Stories:

>