×

கமுதி அருகே ஊரணியில் ஆபத்தான மின் கம்பம்

கமுதி, டிச.5:  கமுதி அருகே ஊரணியில் சாய்ந்த நிலையில் மின் கம்பம் இருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கமுதி அருகே முஷ்டகுறிச்சி கிராமத்தில் உள்ள ஊரணியில் மின் கம்பம் ஒன்று மிகவும் சாய்ந்த நிலையில் உள்ளது. இந்த மின்கம்பம் வழியே இந்த கிராமத்தில் உள்ள ஏராளமான வீடுகளுக்கு மின்விநியோகம் சென்று கொண்டிருக்கிறது. சமீபத்தில் பெய்த மழையால் ஊரணியில் தண்ணீர் இருப்பதால் குளிக்க வருபவர்கள் அச்சத்தில் வருகின்றனர். விடுமுறை தினத்தன்று குளிக்க வரும் சிறுவர்களுக்கும் ஆபத்துதான்.

மேலும் தண்ணீர் குடிக்க வரும் கால்நடைகளுக்கும் பலியாகும் வாய்ப்புள்ளது. எந்த நேரத்திலும் ஒடிந்து விழும் நிலையில் இந்த மின்கம்பம் உள்ளது. இதுபற்றி இப்பகுதி மக்கள் மின்வாரியத்திற்கு பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த பயனும் இல்லை. எனவே ஆபத்து நடக்கும் முன்பு இதனை சரி செய்ய வேண்டுமென மின்வாரியத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : procession ,Kamuthi ,
× RELATED வாழப்பாடி அருகே பழுதான மின்கம்பத்தை சீரமைக்க கோரிக்கை