தொழிலாளியிடம் கத்தியை காட்டி செல்போன் பறிக்க முயன்ற 3 பேர் கைது

திருப்பூர், டிச 5:  திருப்பூரில் நடந்து சென்ற தொழிலாளியிடம் கத்தியை காட்டி செல்போன், பணம் பறிக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.  திருப்பூர் வீரபாண்டி பகுதிக்குட்பட்ட பழவஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார்(49). கட்டிட தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு பணியை முடித்து விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது பழவஞ்சிபாளையம் செல்லும் ரோட்டில் இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் செந்தில்குமாரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போன், பணம் ஆகியவற்றை பறிக்க முயன்றனர். அப்போது செந்தில்குமார் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் அவர்கள் மூவரையும் பிடித்தனர். தொடர்ந்து அவர்களை வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில் ஜெயக்குமார்(40), ஐயப்பன்(38), வீரபாண்டி(30) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertising
Advertising

Related Stories: