காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம்

உடுமலை,டிச.5: திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம், உடுமலை  அருகே பாலப்பம்பட்டியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் மாவட்ட தலைவர்  தென்னரசு தலைமை வகித்தார். காங்கிரஸ் அகில இந்திய செயலாளர் சஞ்சய்தத்,  மாநில செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டனர். கூட்டத்தில், தாராபுரம் எம்.எல்.ஏ. காளிமுத்து, முன்னாள்  மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் மற்றும் நகர, வட்டார, பேரூராட்சி தலைவர்கள்,  தொழிற்சங்க  அணிகளின் உட்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>