ஆற்றில் குளித்த வாலிபர் சடலமாக மீட்பு

விக்கிரவாண்டி, டிச. 4: திண்டிவனத்தை அடுத்த ரெட்டணை கிராமத்தை சேர்ந்த வர்  செல்வம்(26). சென்னையில்  பெயிண்டராக வேலை செய்து வந்தார். கடந்த 2ம் தேதி மாலை தனது நண்பர்களுடன்  தொண்டி ஆற்றில் குளிக்க சென்றார். பின்னர் நேரமாகியதால் நண்பர்கள் ஆற்றில் கரை ஏறி வீடு திரும்பினர். பின்பு செல்வத்தை தேடியபோது அவர் கரைக்கு வராதது தெரிந்தது. தங்களுக்கு முன்னால் வீடு திரும்பியிருக்கலாம் என எண்ணி அனைவரும் வந்து விட்டனர்.நேற்று முன்தினம் காலை வரை செல்வம் வீடு திரும்பாததால் அவரது மனைவி தேட ஆரம்பித்தார். ஆற்றின் கரையில் சென்று பார்த்த போது செல்வத்தின் துணிகள் மட்டும் கிடந்ததால் ஆற்றில் மூழ்கி இருக்கலாம் என சந்தேகம் அடைந்த அவர் பெரியதச்சூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று காலை 9 மணிக்கு தொண்டி  ஆற்று தண்ணீரில் சடலம் மிதந்தது . இதையடுத்து பெரியதச்சூர் போலீசார் செல்வத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories:

>