பைக் விபத்தில் தொழிலதிபர் பலி

திண்டிவனம், டிச. 4:  திண்டிவனம் அடுத்துள்ள வெள்ளகுளம்- உலகாபுரம் சாலையில் இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலதிபர் பலியானார்.மரக்காணத்தை சேர்ந்தவர் யுவராஜ் (43). உலகாபுரத்தில் கிரஷர் வைத்துள்ளார். நேற்று இரவு அவர் கிரஷரில் இருந்து மரக்காணத்தில் உள்ள வீட்டுக்கு பைக்கில் சென்றுள்ளார்.அப்போது வெள்ளகுளத்திலிருந்து உலகாபுரம் நோக்கி பைக்கில் வந்த ராவணாபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மனோகரன் (29) என்பவரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர்.இதில் யுவராஜ் பலத்த காயமடைந்து திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து யுவராஜின் அண்ணன் சுரேஷ் பிரம்மதேசம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: