திருப்புத்தூரில் தூய அமல அன்னை ஆலயத்தில் ஆண்டுத் திருவிழா கொடியேற்றம்

திருப்புத்தூர், டிச. 1: திருப்புத்தூரிலுள்ள தூய அமலஅன்னை ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திருப்புத்தூர் தூய அமல அன்னை ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் முதல் நிகழ்வாக அமல அன்னையின் அருட்கர வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கொடிமரத்தில் அமல அன்னை உருவம் தாங்கிய கொடி கட்டப்பட்டு தூபம் காட்டப்பட்டது. திருக்கொடியை சிவகங்கை மாவட்ட வியானி அருட்பணி மைய செயலர் அமலன் ஏற்றி வைத்தார். மேலும் நிகழ்ச்சியில் பங்குதந்தை சந்தியாகு மற்றும் கிறித்துவ பெருமக்கள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து திருப்பலி நடைபெற்றது.

நேற்று முன்தினம் இரவு துவங்கிய இவ்விழா வரும் டிச.8ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. தினமும் ஆன்மீகத்தில், துன்பத்தில், இறைவிருப்பத்தில், திருக்குடும்பத்தில், சீடத்துவத்தில், கீழ்படிதலில், நற்செய்தியில், ஜெபத்தில் மரியாள் என்ற தலைப்புகளில் பங்குத் தந்தையர்கள் ஒவ்வொரு நாளும் திருப்பலி நிகழ்ச்சி நடத்த உள்ளனர். நிறைவு நாளான டிச.8ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று நற்கருணையில் மரியாள் என்ற தலைப்பில் திருப்பலி நிறைவுற்றவுடன் இரவு அன்னை தேர்பவனியுடன் திருவிழா நிறைவுற்று, கொடியிறக்கம் நடைபெறும். 10 நாள் திருவிழாவில் திருப்புத்தூர் மற்றும் சுற்றுப்புர பகுதியில் உள்ள இறைமக்கள் திராளன அளவில் கலந்து கொள்வர்.

Related Stories: