கடையநல்லூர் ஒன்றிய அமமுகவினர் அதிமுகவில் ஐக்கியம்

நெல்லை, நவ.27:  கடையநல்லூர் ஒன்றிய அமமுகவினர் அக்கட்சியில் இருந்து விலகி நெல்லையில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.கடையநல்லூர் ஒன்றியம் சுந்தரேசபுரம் ஊராட்சி அமமுக செயலாளர் கருத்தப்பாண்டியன் தலைமையில் கொடிக்குறிச்சி ஒன்றிய ஒன்றிய விவசாய அணி செயலாளர் ஆறுமுகம், சொக்கம்பட்டி ஊராட்சி அமமுக செயலாளர் சந்தனபாண்டியன், சண்முககுமார் ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகி நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் தச்சை பகுதி செயலாளர் தச்சை மாதவன், திருத்து சின்னத்துரை, கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் வசந்தம் முத்துப்பாண்டியன் மற்றும் காந்தி வெங்கடாச்சலம், தச்சை மணி, சுப்பையா, ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: