கல்லல் அருகே கண்மாயில் புதிய மடை கட்ட கலெக்டரிடம் மனு

சிவகங்கை, நவ. 26: கல்லல் அருகே செவரக்கோட்டை கண்மாயில் பழுதான மடைகளை அகற்றி புதிய மடைகள் கட்டித்தரக்கோரி கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து கிராமத்தினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கல்லல் ஒன்றியம் செவரக்கோட்டை கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அத்தாணிக்கண்மாய் உள்ளது. இக்கண்மாய் நீண்ட காலமாக தூர்வாரப்படவில்லை. இதனால் கண்மாய், வரத்துக்கால்வாய், மடைகளும் தூர்ந்து பழுதாகி உள்ளது. இதனால் இக்கண்மாய் மூலம் பாசனம் பெறும் 300 ஏக்கர் விவசாயநிலங்களும் விவசாயம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றன.  இதுபோல் இங்குள்ள செட்டிக்கண்மாய் மடைகள் இரண்டும் பழுதாகியுள்ளன. இதனால் இந்த கண்மாயிலும் பாசனத்திற்கு நீர் பாய்ச்ச முடியவில்லை. இரண்டு கண்மாய்களின் மடைகளை புதிதாக கட்டவும், கண்மாயை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Related Stories: