பள்ளிபாளையம் தபால் அலுவலகத்தில் இணைய சேவை மந்தம்

பள்ளிபாளையம், நவ.26: பள்ளிபாளையம் தபால் அலுவலகத்தில், கணினிகள் இயங்க பிஎஸ்என்எஸ் நிறுவனத்தின் இன்டர்நெட் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்புகள், கடந்த சில நாட்களாக சரிவர இயங்குவதில்லை. ரயில் டிக்கெட் பதிவு செய்வது, வைப்பு கணக்கில் தொகை பெறுவது, இருப்பு சரிபார்ப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை விரைந்து செய்ய முடியவில்லை.  இணையத்தின் மூலம் செய்யப்படும் பதிவுகளில் மிகுந்த தாமதம் ஏற்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்களின் நேரம் விரயமாதாக புகார் எழுந்துள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: