திருச்செங்கோடு அருகே கூட்டுறவு கடன் சங்க புதிய கட்டிடம் திறப்பு

திருச்செங்கோடு, நவ.22: திருச்செங்கோடு தாலுகா  புதுப்புளியம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு, ₹29 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அலுவலக திறப்பு விழா நடந்தது. மின்துறை அமைச்சர் தங்கமணி, புதிய கட்டிடத்தை திறந்து வைத்து நவீன வசதிகள், பாதுகாப்பு பெட்டகத்தை பார்வையிட்டார். அப்போது  அமைச்சர்  பேசுகையில், ‘புதுப்புளியம்பட்டி கூட்டுறவு கடன் சங்கம் 1,178 உறுப்பினர்களை கொண்டு, சுமார் ₹43 லட்சம் பங்கு மூலதனத்துடன் செயல்பட்டு வருகிறது.  கடந்த ஆண்டு ₹6.65 லட்சம் நிகரலாபம் ஈட்டி உள்ளது. இதுவரை ₹44 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது,’ என்றார். தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார் இந்த நிகழ்ச்சியில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்லகுமார், சித்தாளந்தூர் முன்னாள் தலைவர் மணியம், புளியம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் நல்லையன், துணைத்தலைவர்  குப்புசாமி,  ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சி திட்ட பொது மேலாளர்  யசோதா தேவி, திருச்செங்கோடு சரக துணைப்பதிவாளர் வெங்கடாஜலம், புதுப்புளியம்பட்டி கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: