காரைக்குடி அருகே வங்கியில் கடன் வாங்கிய தம்பதியர் மீது வழக்கு

காரைக்குடி, நவ.22: காரைக்குடி அருகே பாரத ஸ்டேட் வங்கியில் கடன் வாங்கிய தம்பதியர் மீது காவல்துறை வழக்கு தொடுத்துள்ளது.

காரைக்குடி அருகே உள்ள புதுவயலில் நவீன அரிசி ஆலை நடத்திவருபவர் முகமது அலி ஜின்னா. இவர் தனது மில் தொழில் அபிவிருத்திக்காக கடந்த 2004ம் ஆண்டு காரைக்குடியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் 25 லட்ச ரூபாய் கடனாக பெற்றுள்ளார். அதற்கு தனது மனைவி பெயரில் உள்ள அரிசி ஆலையையும் அதில் இருந்த 6000 நெல் மூட்டைகளையும் ஈடாக வைத்துள்ளனர்.

அவர் வாங்கிய கடனுக்கு 15 ஆண்டுகளாக கடன் தொகையையும், வட்டி தொகையையும் செலுத்தாமல் இருந்துள்ளதாக தெரிகிறது. தற்போது வட்டியுடன், அசலும் சேர்ந்து 3 கோடி ரூபாய்க்கும் மேலாகிய நிலையில், முகமதுஅலி ஜின்னா மற்றும் அவரது மனைவி ரஹ்மத்நிஷா கடனாக பெற்ற தொகையை செலுத்தாததால், வங்கி அதிகாரிகள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அரிசி ஆலையில் நெல் மூட்டைகள் காணாமல் போய் உள்ளது, மேலும் கட்டிடமும் சேதப்படுத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து சாக்கோட்டை காவல் நிலையத்தில் பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் நாகராஜன் புகார் அளித்தார். இதன் பேரில் சாக்கோட்டை போலீசார், கணவன், மனைவி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.

Related Stories: