ஆலோசனை கூட்டம்

சோழவந்தான், நவ.22: சோழவந்தானில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் வாடிப்பட்டி ஒன்றிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தேசிய இளைஞரணி செயலாளர் அசோக் தலைமை வகித்தார். ஒன்றிய நிர்வாகிகள் மாரியப்பன், தர்மராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகி இளங்கோ வரவேற்றார். கூட்டத்தில் வரும் உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறவும், தீவிர உறுப்பினர் சேர்க்கை நடத்தவும், அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் பெறப்பட்டது. இதில் மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் ராஜா, மூத்த நிர்வாகிகள் மகாலிங்கம், சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: