அதிமுக அரசை கண்டித்து திமுகவினர் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம், நவ. 22: கர்நாடக அரசு தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்டு

வதை தடுக்கத்தவறிய தமிழக அதிமுக அரசை கண்டித்து விழுப்புரத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்கத்தவறிய தமிழக அதிமுக அரசை கண்டித்து விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி நேற்று காலை அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. விழுப்புரம் மாவட்ட திமுக சார்பில் பழைய பேருந்துநிலையம் முன்பு கொட்டும் மழையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பொன்முடி எம்எல்ஏ தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். எம்எல்ஏக்கள் மஸ்தான், உதயசூரியன், வசந்தம்கார்த்திகேயன், சீத்தாபதிசொக்கலிங்கம், மாசிலாமணி, தெற்கு மாவட்ட செயலாளர் அங்கையற்கண்ணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட பொருளாளர் புகழேந்தி வரவேற்றார். தலைமை செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ், மாவட்ட நிர்வாகிகள் ஜெயச்சந்திரன், மைதிலி, நமச்சிவாயம், மலர்மன்னன், செல்வநாயகம், செஞ்சி சிவா, முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ், பொதுக்குழு உறுப்பினர் பஞ்சநாதன், ஒன்றிய நிர்வாகிகள் தங்கம், சக்கரை, துரை, பிரபாகரன், மும்மூர்த்தி, தெய்வசிகாமணி, வினோத், கபாலி, தொமுச பொதுச்செயலாளர் பிரபாதண்டபாணி, தகவல்தொழில்நுட்ப அணி அன்பரசு, நகர நிர்வாகிகள் புருஷோத்தமன், தாகீர், வழக்கறிஞர் காடுவெட்டி ஏழுமலை, சித்திக்அலி, கவிமோசஸ், அரசு ஒப்பந்ததாரர் மணிகண்டன், ஏழுமலை, சுவைசுரேஷ், செந்தில்குமார் உள்பட ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பொன்முடி எம்எல்ஏ பேசியதாவது:கர்நாடக அரசு தடுப்பணை கட்டுவதன் மூலம் 1000 மில்லியன் கனஅடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள முடியும். இதனால் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயத்திற்கு மட்டுமின்றி குடிநீருக்கே பஞ்சம் ஏற்படும். விழுப்புரம் நகரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தென்பெண்ணை ஆற்றின் கூட்டுகுடிநீர் திட்டத்தின் மூலம்தான் குடிநீர் வழங்கப்படுகிறது. மத்திய அரசும் இந்த விவகாரத்தில் தமிழகத்தை வஞ்சித்து விட்டது. தமிழக அரசு திறமையாக நீதிமன்றத்தில் வாதாடவில்லை. அம்மாநில அரசின் சூழ்ச்சிகளை தடுக்க தமிழக அரசு முன்வரவேண்டும். நமக்கு தீர்ப்பாயம் தேவையில்லை, அரசியலமைப்பு ஆணையத்தை உருவாக்க வேண்டும். 1892 உடன்படிக்கையில் தமிழக அரசு அனுமதியில்லாமல் தடுப்பணைகளை கர்நாடக அரசு கட்டக்கூடாது என்ற உத்தரவு இருந்தும் அதனை மீறி செயல்படுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: