×

விபத்தில் 2 பேர் பலி வேன் டிரைவருக்கு இரண்டு ஆண்டு சிறை

திருவாடானை, நவ.20:  சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் சென்று விபத்தில் சிக்கி 2 பேர் பலியான சம்பவத்தில், டிரைவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவாடானை கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2010ம் ஆண்டு தொண்டியில் இருந்து சரக்கு வாகனத்தில் தொண்டியை சேர்ந்த அப்துல் ஹக் மகன் முகமது உசேன் சென்றார். வாகனத்தில் 26 ஆட்கள் சென்றுள்ளனர். வாகனம் பி.வி.பட்டினம் அருகே சென்றபோது எதிர்பாராவிதமாக தலைகீழாக கவிழ்ந்தது. இதில் பாண்டியம்மாள் மற்றும் புஷ்பம் ஆகிய இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து இறந்த பெண்ணின் உறவினர் மணிகண்டன் தொண்டி போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தன.  இந்த வழக்கு திருவாடானை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பாலமுருகன், சரக்கு வேனை ஓட்டிய டிரைவர் முகமது உசேனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.

Tags : Driver driver ,accident ,
× RELATED விபத்தில் உயிரிழந்த மாணவ, மாணவிகளுக்கு அஞ்சலி