×

இந்திராகாந்தி படத்திற்கு மரியாதை

பரமக்குடி, நவ.20:   பரமக்குடியில் காங்கிரஸ் கட்சியின் மாநில நெசவாளர் அணியின் சார்பாக, மறைந்த பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, காந்தி சிலை முன்பு அவரது உருவப் படத்திற்கு மாநில நெசவாளர் அணி செயலாளர் கோதண்டராமன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்ட துணைத்தலைவர் மகாதேவன், ஐ.என்.டி.யு.சி முன்னாள் தலைவர் சேஷய்யன், மாநில நெசவாளர் அணி செயற்குழு உறுப்பினர் நாகராஜன், ஆர்.டி.ஐ அணி மாநில செயலாளர் செந்தில் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு இனிப்பு வழங்கி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது. இதில் நயினார்கோவில் வட்டார தலைவர் ஜோதி பாலன், மாநில சிறுபான்மை பிரிவு முன்னாள் செயலாளர் ரபீக் அகமது உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியில் நெசவாளர் அணி மாவட்ட தலைவர் சந்திரன் நன்றி கூறினார்.

Tags : Indira Gandhi ,
× RELATED அரசியல் சட்டத்தை படுகொலை செய்த...