குமரகுரு எம்எல்ஏ இல்ல திருமண விழா

கள்ளக்குறிச்சி, நவ. 13: உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு இல்ல திருமண விழாவில் முதல்வர் பழனிசாமி கலந்து ெகாண்டு மணமக்களை நேரில் வாழ்த்தினார். உளுந்தூர்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திருமலை திருப்பதி தேவஸ்தான போர்டு அறங்காவலர் குழு உறுப்பினருமான குமரகுரு-மயில்மணி தம்பதியினரின் மகள் இலக்கியா திருமண நிகழ்ச்சி சேலம் மாவட்டம் உத்தமசோழபுரம் கரபு

நாதர் கோயிலில் நேற்று முன்தினம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் பழனிசாமி பங்கேற்று மணமக்கள் இலக்கியா-ராம்பிரசாத் ஆகியோரை வாழ்த்தினார். வினாயகா கல்வி நிறுவன தலைவர் நமச்சிவாயம், முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் சாய்ராம் ஆகியோர் வரவேற்றனர்.

விழாவில் தமிழக சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் சிவி.சண்முகம், சம்பத், எம்எல்ஏக்கள் முருகுமாறன், வெங்கடாசலம்,

பிரபு, மாநில கூட்டுறவு சங்க தலைவர் இளங்கோவன், தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலை இணைய தலைவர் ராஜசேகர், முன்னாள் அமைச்சர்கள் பரஞ்ஜோதி, வைகை செல்வன், முன்னாள் எம்பிக்கள் அருண்மொழிதேவன், நகர செயலாளர்கள் பாபு, ஷியாம்சுந்தர், மாவட்ட அரசு வழக்கறிஞர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் அய்யப்பா, அரசு, அருணகிரி, பழனி, முன்னாள் மாவட்ட ஜெ. பேரவை தலைவர் ஞானவேல், அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட பொருளாளர் வெற்றிவேல், மாவட்ட மருத்துவரணி பொருளாளர் குமரேசன், பொறியாளர் அய்யந்துரை, வழக்கறிஞர் கலைவாணன், செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Related Stories:

>