தீவனூர் பொய்யாமொழி விநாயகருக்கு அன்னாபிஷேகம்

திண்டிவனம், நவ. 13: திண்டிவனம் அடுத்த தீவனூர் பொய்யாமொழி விநாயகர் எம்பெருமானுக்கு நேற்று முன்தினம் அன்னாபிஷேகம் நடைபெற்றது. மிகவும் பிரசித்தி பெற்ற பொய்யாமொழி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சிவலிங்க வடிவிலும் காட்சியளித்து வருகிறார். நேற்று முன்தினம் நடந்த அன்னாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர் சகுந்தலாம்பாள், மணிகண்டன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்

Related Stories:

>