உள்ளாட்சி தேர்தல் எதிரொலி விருப்ப மனு பெற கூடுதல் நிர்வாகிகள்: இபிஎஸ், ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை:  தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் வருகிற 15ம் தேதி மற்றும் 16ம் தேதி விருப்ப மனு பெறலாம் என்றும், அதன்படி அந்தந்த மாவட்டங்களிலேயே விருப்பமனு வாங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, கூடுதலாக சில மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அந்த மாவட்டங்களில் யாரிடம் விண்ணப்பங்களை பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் அதிமுக அமைப்பு ரீதியான மாவட்ட தலைநகரங்களில் விண்ணப்ப படிவங்களை ஏற்கனவே அறிவிக்கப்பட்டவர்களுடன், கீழ்க்கண்டவர்களும் இணைந்து விருப்ப மனுக்களை பெறுவார்கள். அதன்படி,எஸ்.ராமச்சந்திரன் - திருவண்ணாமலை மேற்குஆர்.இளவரசன் - அரியலூர்ஆர்.இளங்கோவன் - சேலம் புறநகர் கே.எஸ்.சீனிவாசன் - வடசென்னை தெற்கு மா.இளங்கோவன், பா.வெற்றிவேல் - மதுரை புறநகர் மேற்கு ஆர்.வி.என்.கண்ணன், கு.சுப்புரத்தினம் - திண்டுக்கல் எம்.கோவை, டி.ரமேஷ், டி.சிவராஜ் - தென்சென்னை வடக்கு வி.ஆர்.திருநாராயணன், சி.பி.மூவேந்தன் - தென்சென்னை தெற்கு க.பாலகுமார் - காஞ்சிபுரம் மத்தியம் பெரும்பாக்கம் இ.ராஜசேகர் - காஞ்சிபுரம் கிழக்கு தி.க.அமுல்கந்தசாமி - திருப்பூர் மாநகர் குறளார் மு.கோபிநாதன், ஜி.கே.இன்பராஜ் - திருவள்ளூர் கிழக்கு எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் - திருநெல்வேலி புறநகர் சத்யா பன்னீர்செல்வம் - கடலூர் கிழக்கு எல்.ஜெயசுதா - திருவண்ணாமலை வடக்கு கோவை செல்வராஜ், சிடிசி அ.அப்துல்ஜப்பார் - கோவை மாநகர் ஏ.எம்.டி.இஸ்மாயில் - கரூர்.

Related Stories:

>