×

மாவட்ட வருவாய் அலுவலரை கண்டித்து கொட்டும் மழையில் உண்ணாவிரதம்

சாயல்குடி, நவ. 12:  ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலரை கண்டித்து வருவாய் துறையினர் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வருபவர் முத்துமாரி. இவர் கடந்த மூன்று வருடமாக ஒரே இடத்தில் பணியாற்றி வருகிறார். வருவாய்துறை அலுவலர்களிடம் ஊழியர் விரோத மனப்பான்மையோடு நடத்துகிறார் என குற்றம்சாட்டி தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் நேற்று உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது. ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பழனிக்குமார் தலைமை வகித்தார். முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலரை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கம் சார்பில் கவர்னர், தமிழக முதல்வர், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, வருவாய்துறை அமைச்சர், முதன்மை செயலர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பி வைத்தனர். பினனர் நுற்றுக்கணக்காக வருவாய்துறை ஊழியர்கள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மழை விட்டு, விட்டு  பெய்தது. மழையை பொருட்படுத்தாமல் சில ஊழியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : District Revenue Officer ,
× RELATED கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் பலத்த மழை