வாகன ஓட்டியிடம் சாவியை பறித்து தகாத வார்த்தை பேசும் போலீஸ்காரர்

ஓசூர், நவ.7: குடிபோதையில் வந்ததாக இருசக்கர வாகன ஓட்டியிடம் சாவியை பறித்துக் கொண்டு, போலீஸ்காரர் தகாத வார்த்தையில் பேசும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஓசூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் காவலராக பணிபுரிந்து வருபவர் விநாயகமூர்த்தி. இவர் நேற்று  ஓசூர் ரிங் ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர், குடிபோதையில் இருந்ததாக கூறி, அவரது வாகனத்தின் சாவியை காவலர் விநாயகமூர்த்தி தரும்படி கேட்கிறார். அவர் தர மறுக்கவே, தலைமுடியை இறுக்கி பிடித்து மிரட்டி கேட்கிறார்.

பின்னர், சாவியை பறித்துக் கொண்டு, அந்த நபரை தகாத வார்த்தைகளால் பேசி, அடிக்கவும் முயன்றார். அதை அந்த பகுதியில் ஒருவர் படம் பிடித்து, சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். இது ஓசூர் பகுதியில் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. இருசக்கர வாகன ஓட்டியிடம் தவறான முறையில் நடந்து கொண்ட காவலர் மீது, நடவடிக்கை வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: