புளியங்குடி மாற்றுத்திறன் பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம்

புளியங்குடி, அக்.27:  டி.எஸ்.எம் அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் பள்ளியானது சுமார் பன்னிரண்டு ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட ஆதரவற்ற மனவளர்ச்சி குறைந்த மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். தீபாவளி பண்டிகையை அவர்களும் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் சிறப்பு பள்ளியின் தாளாளர் மாரியப்பன் முயற்சி எடுத்து அனைத்து குழந்தைகளுக்கும் புத்தாடைகள்,மற்றும் இனிப்புகளும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் புளியங்குடி காவல் உதவி ஆய்வாளர் தர்மராஜ், அப்துல்கலாம் பொதுநல சேவைஅமைப்பின் தலைவர் சின்னராஜ், செயலாளர் பாக்கியராஜ் மற்றும் சிறப்பு பள்ளியின் பணியாளர்கள் செல்வராஜ், சந்துயகப்பன், பிரமிளா, முத்துலட்சுமி, சுகன்யா, ஜாஸ்மின்பேகம், மகேஸ்வரி, சிவகாமி, மாடசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

Related Stories: