அம்பை எம்எல்ஏவின் சகோதரர் மரணம்

விகேபுரம், அக்.27:  அம்பை எம்எல்ஏ முருகையா பாண்டியனின் சகோதரர் ஆறுமுகத்தேவர்  நேற்று காலமானார். கல்லிடைக்குறிச்சி பகழிகூத்தர் வடக்கு தெருவில் வசித்து வரும் அம்பை எம்எல்ஏ முருகையாபாண்டியனின் மூத்த சகோதரர் ஆறுமுகத்தேவர் நேற்று காலமானார். அன்னாரின் இறுதிசடங்கு கல்லிடைக்குறிச்சியில் உள்ள அவரது வீட்டில் நேற்று மாலை நடந்தது. இதில் முருகையாபாண்டியன் எம்எல்ஏ, மாவட்ட இளைஞர் பாசறை துணை செயலாளர் வெங்கட்ராமன் மற்றும் ஏராளமான அதிமுகவினர்கள், உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: