கிருஷ்ணகிரி, அக்.24: ராயக்கோட்டை அருகே, தேங்காய் வியாபாரி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ராயக்கோட்டை அருகே உள்ள எடவனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் சாக்கப்பன்(65). தேங்காய் வியாபாரியான இவரது மனைவி பொன்னியம்மாள், தாய் சூடம்மாள் ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, வீட்டிற்குள் நுழைந்த 6 பேர் கும்பல், நகை, பணம் கேட்டு சாக்கப்பனின் கை மணிக்கட்டில் கத்தியால் வெட்டினர். அக்கம்பக்கத்தினர் வருவதை அறிந்த கொள்ளை கும்பல், அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதையடுத்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சாக்கப்பன் உயிரிழந்தார்.