×

கீழக்கரை பெண்கள் பள்ளியில் அயோடின் பற்றாக்குறை குறைபாடு கருத்தரங்கம்

கீழக்கரை, அக்.23: உலக  அயோடின் பற்றாக்குறை குறைபாடு தடுப்பு தினத்தை முன்னிட்டு கீழக்கரை  ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அயோடின் பற்றாக்குறை குறைபாடு குறித்த  கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை  ஆசிரியர்(பொ) ஜாக்லின் லதா தலைமை வகித்தார். கீழக்கரை நுகர்வோர் நலச்சங்க  செயலாளர் செய்யது இபுராகிம், உணவு பாதுகாப்பு துறை ஜெயராஜ், லிங்கம், வேலு  ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் நுகர்வோர் நலச்சங்க செயலாளர் லதா  வரவேற்றார். இதில் கீழக்கரை நுகர்வோர் நலச்சங்க செயலாளர் செய்யது  இபிராகிம் பேசுகையில், மனிதனுக்கு நாளொன்றுக்கு 150 மைக்ரோன் அயோடின்  தேவைப்படுகிறது, கர்ப்பிணிகளுக்கு நளொன்றுக்கு 200 மைக்ரோன் அயோடின் தேவைப்படுகிறது. இது குறைவதால் முன் கழுத்து நோய் (தைராய்டு) ஏற்படுகிறது. எனவே  அயோடின் கலந்த உப்பை சரியான அளவு தினமும் அனைவரும் பயன்படுத்த வேண்டும்  இவ்வாறு மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படும் வகையில் பேசி அதுகுறித்த  விழிப்புணர்வு புத்தகத்தை வெளியிட்டார். இதில் ஏராளமான மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை மரியம் நன்றி கூறினார்.

Tags : Down Under Girls School ,
× RELATED பராமரிப்பு இல்லாமல் கடற்கரையோரம்...