×

அதிக விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை

சிவகங்கை, அக். 23: சிவகங்கை மாவட்டத்தில் அதிக விலைக்கு உரம விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்கநர் கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் தொடர் மழையால் விவசாய பணிகள் நடந்து வருகிறது. இப்பருவத்திற்கு தேவையான உரங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் போதிய அளவு இருப்பு உள்ளது. 632 டன் யூரியா, 294 டன் டிஏபி, 232 டன் காம்ப்ளக்ஸ், 216 டன் பொட்டாஷ் மற்றும் தனியார் கடைகள் உட்பட மொத்தம் 7 ஆயிரத்து 280 டன் உரங்கள் மாவட்டத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உரங்களை விற்பனை செய்யாமல் செயற்கையான உரப்பற்றாக்குறையை ஏற்படுத்துவது, அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட கூடுதலான விலைக்கு விற்கக்கூடாது. விலைப்பட்டியல் மற்றும் ரசீது விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். உரங்களை விற்பனை செய்ய மறுத்தாலோ, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ, ரசீது கொடுக்க மறுத்தாலோ சம்பந்தப்பட்ட உர விற்பனை விற்பனையாளரின் உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஒரே நாளில் சவரன் 752 குறைந்தது