அடிக்கடி விபத்து ஏற்படுவதால் மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எதிரில் வேகத்தடை அமைக்க வேண்டும் இளைஞர் பெருமன்றம் வலியுறுத்தல்

மன்னார்குடி, அக். 23: மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எதிரில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டுமென அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் நகரக்குழு சார்பில் நகர செயலாளர் சிவரஞ்சித் தலைமையில் மன்னார்குடி நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் விஜயகுமாரிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: மன்னார்குடியில் இயங்கும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் எதிரே உள்ள சாலையில் தினம்தோறும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களும், பேருந்துகள், கார் மட்டும் இருசக்கர வாகனங்கள் செல்கின்றன. வேகத்தடை இல்லாத காரணத்தினால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. மேலும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் வயதானவர்கள், கர்ப்பிணிகள் சாலையை கடக்க பெரிதும் சிரமப்படுகின்றனர். அதனால் மருத்துவமனையின் பிரதான வாயில் எதிரே உள்ள சாலையின் இருபுறமும் வேகத்தடைகளை நிறுவ வேண்டும்.தற்போது மழைக்காலம் என்பதால் நகரத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் தேங்கியுள்ள குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது.இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட பல்வேறு வகையான நோய் கிருமிகளை பரப்புவதால் குப்பைகளை அன்றாடம் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமாக குப்பைகளை சேகரிக்கும் வண்டிகளை பாரபட்சமின்றி அனைத்து தெருக்களுக்கும் அனுப்ப வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப் பிடப் பட்டுள்ளது.

Related Stories: