பிக்பாக்கெட் அடித்த ஆசாமி கைது

கள்ளக்குறிச்சி, அக். 18:     கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் கிராமத்தை சேர்ந்த மொட்டையன் மகன் மாயகிருஷ்ணன்(39). இவர் நேற்று நீலமங்கலம் கிராமத்தில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு பேருந்தில் பயணம் செய்துள்ளார். கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் கூட்ட நெரிசலில் மாயகிருஷ்ணன் பேருந்தில் இருந்து இறங்கியபோது மரம் ஆசாமி ஒருவர் மாயகிருஷ்ணன் பாக்கெட்டில் இருந்த 2 கிராம் தங்க மோதிரம் மற்றும் ரூ.500 பணத்தை பிக்பாக்ெகட் அடித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாயகிருஷ்ணன், பொதுமக்கள் உதவியுடன் அந்த ஆசாமியை பிடித்து கள்ளக்குறிச்சி போலீசில் ஒப்படைத்தார்.  அந்த ஆசாமியிடம், சப்இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் விசாரணை செய்ததில் சென்னை பரங்கிமலை பகுதியை சேர்ந்த துரைராஜ் மகன் பாஸ்கர்(47) என தெரியவந்தது. மாயகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாஸ்கரை கைது செய்து அவரிடமிருந்த நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: