மாவட்டம் பயணிகள் எதிர்பார்ப்பு அப்துல்கலாம் பிறந்தநாள் விழா ெகாண்டாட்டம்

திண்டுக்கல்/ வத்தலக்குண்டு, அக். 16: திண்டுக்கல் அருகே வைவேஸ்புரம் நாகையகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக மனிதவள மேம்பாட்டு கூட்டமைப்பு, டாக்டர் ஏபிஜே.அப்துல்கலாம் சேவை மையம் இணைந்து முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 88வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் விமானபடை வீரர் பெருமாள் தலைமை வகிக்க, அப்துல்கலாம் சேவை மைய துணை செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை காந்திமதி வரவேற்றார். நிகழ்ச்சியை காதர்பாட்ஷா தொகுத்து வழங்கினார். டிஎஸ்பி அய்யர்சாமி, காந்திமன்ற தலைவர் ஜெயசீலன் சிறப்புரையாற்றி மரக்கன்று, பனைவிதை, கல்வி உபகரணங்கள் வழங்கினர். தொடர்ந்து 2018-19ம் ஆண்டில் 10 வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றமைக்கு பாராட்டி சிறந்த கற்பித்தல் பள்ளி விருது வழங்கப்பட்டது.திண்டுக்கல் பேகம்பூரில் நடந்த விழாவிற்கு தேசிய ஒருமைப்பாட்டு இயக்க தலைவர் அப்துல் ஜப்பார் தலைமை வகிக்க, காந்தி மன்ற இயக்க பொதுச்செயலாளர் மருது முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் முகமது ஜக்கிரியா, கார்த்திக், கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

வத்தலக்குண்டு காளியம்மன் கோயில் அருகே ஈடன்கார்டன் லயன்ஸ் கிளப், சுப்பிரமணியசிவா நற்பணி இயக்கம் சார்பில் நடந்த விழாவிற்கு லயன்ஸ் கிளப் தலைவர் பொன் அண்ணாதுரை தலைமை வகிக்க, செயலாளர் ஜெர்மன் ராஜா, தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தனர். இதில்ஜெயமாணிக்கம், ஜான், மருதுஆறுமுகம், பாக்யராஜ், அழகுமணி, ரவி, தங்கப்பாண்டி, செந்தில், ஆண்டவர், வால்டர்ராஜா, சாந்தினி, மைதிலி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அனைவரும் அப்துல்கலாம் படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.ஜி.தும்மலப்பட்டி அம்மன் நர்சரி பள்ளி- பிரைமரி பள்ளி சார்பில் நடந்த அப்துல்கலாம் பிறந்தநாள் விழாவிற்கு தாளாளர் செல்வக்குமார் தலைமை வகித்தார். ஆசிரியர் தனலட்சுமி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார். தொடர்ந்து அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறு, சாதனைகள் எடுத்து கூறப்பட்டது. ஆசிரியர் தேவிபாலா நன்றி கூறினார்.

Related Stories: