இ ந் த நா ள் திண்டுக்கல் ஐடிஐயில் மகளிர் நேரடி சேர்க்கைக்கு காலஅவகாசம் நீட்டிப்பு

திண்டுக்கல், அக். 16: திண்டுக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) மகளிர் நேரடி சேர்க்கைக்கு அக்.21 வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மகளிருக்கான தொழிற்பிரிவுகளில் 2019ம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு கால அவகாசம் அக்.21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கம்மியர் கருவிகள், தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் சாதனங்கள் பராமரிப்பு, திறன் மின்னனுவியல் தொழில்நுட்ப பணியாளர் ஆகிய பாடப்பிரிவுகள் 2 ஆண்டுகளும், கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர், டெஸ்க்டாப் பப்ளிசிங் ஆப்பரேட்டர், தையல் வேலை தொழில்நுட்பம், அலங்கார பூத்தையல் தொழில்நுட்பம், நவீன ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பம் ஆகிய பாடப்பிரிவுகள் ஒரு ஆண்டுகள் நடைபெறும்.

இந்த பயிற்சியில் சேர 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சேர விரும்புவோர் தங்களின் அசல் சான்றிதழ்களுடன் நேரடியாக திண்டுக்கல்லில் (நத்தம் சாலை) உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு வருகை புரிந்து, சேர்ந்து பயன்பெறலாம்.பயிற்சியில் சேருபவர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.500, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா மடிக்கணினி, இலவச பேருந்து வசதி, மகளிருக்கு உச்சகட்ட வயது வரம்பு இல்லை, மத்திய அரசின் சான்றிதழ், விலையில்லா சீருடை மற்றும் தையற்கூலி ஆண்டுதோறும், விலையில்லா பாடப்புத்தகங்கள், விலையில்லா காலணிகள், மொழித்திறன்- கணினி பயிற்சி, விலையில்லா வரைபட கருவிகள், விலையில்லா அடையாள அட்டை, இலவச விடுதி வசதி உண்டு. பயிற்சியின் முடிவில் நிறுவனங்களின் வாயிலாக வளாக நேர்முகத்தேர்வு மூலம் பணியமர்த்தப்படுவார்கள். மத்திய, மாநில அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புள்ளது. மேலும், விபரங்களுக்கு திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்), முதல்வர் லட்சுமியை நேரில் தொடர்பு கொண்டும் மற்றும் தொலைபேசி இணைப்பு எண்: 0451-2470504 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம் என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

Related Stories: