மங்கலகுறிச்சி-பெருங்குளம் சாலையில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

*சீரமைக்க வலியுறுத்தல்ஏரல் :   ஏரல் அருகே மங்கலகுறிச்சியில் இருந்து பெருங்குளம் செல்லும் சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த மூன்று வாரங்களாக தண்ணீர் வீணாகி வருகிறது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஏரல் அருகே மங்கலகுறிச்சி தாமிரபரணி ஆற்றில் இருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் உறைகிணறு அமைக்கப்பட்டு மின்மோட்டார் மூலம் குடி தண்ணீர் எடுத்து பெருங்குளம், பண்டாரவிளை, நட்டாத்தி, சுப்பிரமணியபுரம் வழியாக தரையில் பதிக்கப்பட்டுள்ள பைப் லைன் மூலம் தூத்துக்குடியில் ஒரு பகுதி மக்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இதபோல் சாயர்புரம் கூட்டு குடிநீர் திட்டத்திலும் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. மேலும் நட்டாத்தி உட்பட பல பஞ்சாயத்துகளுக்கும் குடி தண்ணீர் பைப் லைன் மூலம் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் கொண்டு செல்லும் ஒரு குழாயில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக அருகில் உள்ள வயலுக்கு சென்று வருகிறது. மேலும் சாலையிலும் தண்ணீர் தேங்குவதால் ரோட்டில் அரிப்பு ஏற்பட்டு குளம் போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இரவு இவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் சாலையில் தேங்கி கிடக்கும் தண்ணீரால் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும் தினசரி பல ஆயிரக்கணக்கான லிட்டர் குடி தண்ணீர் வீணாகி வருகிறது. எனவே அதிகாரிகள் இந்த குடிநீர் உடைப்பை பார்வையிட்டு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post மங்கலகுறிச்சி-பெருங்குளம் சாலையில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர் appeared first on Dinakaran.

Related Stories: