ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரையில் நிறுவ 37 அடி ஆஞ்சநேயர் சிலை திருச்சி வந்தது

 திருச்சி : திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் மேலூர் கொள்ளிடக்கரையில் 37 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. ஸ்ரீரங்கத்தை சேர்ந்த வாசுதேவன் என்பவர் ஆஞ்சநேயர் சிலையை நிறுவ உள்ளார். தமிழகத்தில் சென்னை நங்கநல்லூரில் உள்ள 33 அடி உயரத்திலும் நாமக்கலில் 18 அடி உயரத்திலும் ஆஞ்சநேயர் சிலை உள்ளது.  தற்போது அதை விட உயரமாக 37 அடி உயர ஆஞ்சநேயர் சிலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. ஸ்ரீரங்கம் மேலூர் கொள்ளிடக்கரையில் ஆஞ்சநேயர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்காக அங்கு கோயில் மற்றும் பீடம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த சிலை நிறுவப்படுவதன் மூலம் தமிழகத்திலேயே உயரமான ஆஞ்சநேயர் சிலை என்ற பெருமையை பெற உள்ளது. தற்போது ஆஞ்சநேயர் சிலை அமைக்கும் பணி முழுவதுமாக முடிவடைந்து, சிலை திருச்சிக்கு கொண்டு வரப்படுகிறது. ஆஞ்சநேயர் சிலை இன்று அதிகாலை 4.30 மணிக்கு கன்டெய்னர் லாரி மூலம் கொள்ளிக்கரைக்கு கொண்டு வரப்பட்டது.  நல்ல பார்த்து கிழே இறக்கப்படுகிறது. இந்த சிலை டிசம்பர் இறுதிக்குள் நிறுவப்பட உள்ளதாக  நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது….

The post ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரையில் நிறுவ 37 அடி ஆஞ்சநேயர் சிலை திருச்சி வந்தது appeared first on Dinakaran.

Related Stories: