தி காவிரி கல்வி நிறுவனங்கள் சார்பில் பேரிடர் விழிப்புணர்வு பேரணி 200 மாணவ- மாணவிகள் பங்கேற்பு

சேலம், அக்.15: தி காவிரி கல்வி நிறுவனங்களின் சார்பில் பேரழிவு அபாய குறைப்புக்கான சர்வதேச தினம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் நந்தகுமார் தலைமை வகித்து பேசினார். கல்வி நிறுவன நிர்வாகிகள் நவநீதம், கலைச்செல்வன் மற்றும் தீயணைப்பு துறையைச் சேர்ந்த அருண்குமார், மேச்சேரி காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேசன், தீயணைப்பு அலுவலர் மேட்டூர் ஐயந்துரை, வருவாய் ஆய்வாளர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மேட்டூர் தாசில்தார் அசினா பானு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இப்பேரணியில் 200க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு தி காவிரி கல்வி  நிறுவனங்களின் கௌரவ தலைவர் நடேசன், தலைவர் அன்பழகன், துணைத்தலைவர்  மதன்கார்த்திக், செயலாளர் இளங்கோவன், தாளாளர் ராமநாதன், ஒருங்கிணைப்பாளர்  ரேவதி இளங்கோவன், செயல் இயக்குநர் கருப்பண்ணன், டீன் ஓபுளி ஆகியோர்  பாராட்டு தெரிவித்தனர். முன்னதாக பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டுநலப்பணிதிட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வரவேற்றார். முடிவில் தி காவிரி பொறியியல் கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித் நன்றி கூறினார்.

Related Stories: