எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் பேரிடர் மீட்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

கடையநல்லூர், அக். 15: கடையநல்லூர் எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரியில், தாலுகா அலுவலகம் சார்பில் உலக பேரிடர் மீட்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பேரணி நடந்தது. கோட்டாட்சியர் பழனிக்குமார் தலைமை வகித்தார். ஆய்வு குழு அலுவலர் மூர்த்தி, தாசில்தார் அழகப்பராஜா முன்னிலை வகித்தனர். கல்லூரி சேர்மன் முகைதீன் அப்துல்காதர் வரவேற்றார். தலைமையிடத்து துணை தாசில்தார் திருமலைமுருகன் தொகுத்து வழங்கினார். போலீஸ் எஸ்ஐக்கள் அச்சன்புதூர் கனகராஜ், சாம்பவர்வடகரை செல்வி, இலத்தூர் முத்துக்கிருஷ்ணன், வன அலுவலர் லூமிக்ஸ், தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் அறிவழகன், சண்முகசுந்தரம், தேசிய நெடுஞ்சாலை உதவி பொறியாளர் கார்த்திக்ராஜா, மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சேக்உமர்பரூக், பேரிடர் மேலாண்மை குழு தலைவர் மாஸ் முகம்மதுஅன்சாரி ஆகியோர் பேரிடர் தடுப்பு குறித்து பேசினர்.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் மதியழகன், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெரியஇலை மனோகர், இசை ஆசிரியர் சுப்பிரமணியன் ஆகியோர் கிராமிய பாடல் மூலம் பேரிடர் தடுப்பு குறித்து விளக்கினர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பேரிடர் குழு மாவட்ட செயலாளர் அப்துல்பாசித், காவா டிரஸ்ட் ஜாபர், முகம்மது அலி, வருவாய் ஆய்வாளர்கள் முருகன், ஜேசுராஜ், விஏஓ தமிழ்செல்வி, தாலுகா அவலுவலக உதவியாளர்கள் மாரியப்பன், ராஜாமணி, விஏஓக்கள் மற்றும் கிராம உதவியாளர்கள், எவரெஸ்ட் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மேலும் தீயணைப்புத்துறையினர் தீ விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு பாதுகாப்பாக வெளியே கொண்டு வருவது குறித்து செயல்விளக்கம் அளித்தனர். முன்னதாக பேரிடர் மீட்பு தினத்தை முன்னிட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை ஆய்வுக்குழு அலுவலர் மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணி நகராட்சி சந்தை முன்பு துவங்கி பள்ளிவாசல் முன்பு நிறைவடைந்து.

இதேபோல் மானூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய பேரிடர் மீட்பு தினத்தை முன்னிட்டு இயற்கை பேரிடர் ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது. தாசில்தார் பாஸ்கரன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் அருமைஸ்மைலின் வரவேற்றார். பாளை. தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் பேரிடர்கள் குறித்தும், அதிலிருந்து தன்னைத்தானே காத்துக் கொள்வதும். பிறரை காப்பாற்றுவதும் குறித்த விளக்கவுரை நிகழ்த்தினார். பாதுகாப்பான பட்டாசுகள் வெடிப்பது குறித்தும், எதிர்பாராதவிதமாக தீப்பற்றிக்கொண்டால் காப்பாற்றும் முறை பற்றியும் பேசினார். மேலும் தீயணைப்புத் துறை காவலர்கள் பேரிடர் மீட்பு ஒத்திகை செய்து காட்டினர்.தொடர்ந்து பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர், இதில் மானூர் துணை தாசில்தார் மாரியப்பன் மற்றும் தாலுகா ஊழியர்கள், போலீசார், ஆசிரிய ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: