மீன் அங்காடி ஏல உரிமை ரத்து செய்யக்கோரி மனு

சிவகங்கை, அக்.10: காரைக்குடி மீன் வியாபாரிகள் சங்கம் சார்பில் கலெக்டர் ஜெயகாந்தனிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் காரைக்குடி நகரை சுற்றிலும் பல ஆண்டுகளாக மீன் வியாபாரம் செய்து வருகிறோம். நகராட்சி மீன் விற்பனை அங்காடியில் தனி நபர் ஒருவர் ஏலம் எடுத்தார். வேறு வியாபாரிகளை வியாபாரம் செய்ய அனுமதிக்கவில்லை. இப்பிரச்சினை தொடர்பாக கடந்த 5ம் தேதி டிஎஸ்பி, தாசில்தார், நகராட்சி பொறியாளர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி மொத்தமுள்ள 48 கடைகளில் 24 கடைகளை காரைக்குடி மீன் வியாபாரிகளுக்கும், மீதமுள்ள 24 கடைகள் ஏலம் எடுத்தவர் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது மீன் வியாபாரிகளுக்கு கடை தர மறுக்கின்றனர். எனவே சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் தனி நபரிடம் இருந்து காரைக்குடி நகராட்சி அங்காடியை மீட்டு மீன் வியாபாரிகள் சங்கம் நடத்திக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும்.   மேலும் தனி நபரிடம் இருந்து ஏல உரிமையை ரத்து செய்ய வேண்டும்.

Related Stories: