நத்தம் தாலுகா அலுவலக இ-சேவை மையத்தில் இயங்காத மின் விசிறிகள்

நத்தம், அக். 10: நத்தம் தாலுகா அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அரசு சார்பில இ-சேவை இயங்கி வருகிறது. இங்கு பிறப்பு, வருமானம், சாதி, இருப்பிடம் உள்ளிட்ட சான்றிதழ்கள், பட்டா பெயர் மாற்றம், பட்டா உட்பிரிவு, ஆதார் கார்டு, ஸ்மார்ட்கார்டு பெயர் திருத்தம் போன்றவைகளுக்கு விண்ணப்பிக்கப்படுகின்றன. இங்கு தினசரி பொதுமக்கள் அதிகம் வந்து செல்கின்றனர். இங்கு வரும் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் கேட்கப்பட்ட விபரங்களை கம்ப்யூட்டரில் உள்ளீடு செய்ய வேண்டும். அதற்கு ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் சற்று நேரம் ஆகும். இதனால் அங்கு வருபவர்கள் சற்று நேரம் காத்திருந்து செல்ல வேண்டியுள்ளது.

இந்நிலையில் கடந்த வாரம் பெய்த மழையால் இ-சேவை மைய கட்டிடத்தில் உள்ள மின்விசிறிகளில் நீர் இறங்கி அவைகள் செயல்படாமல் உள்ளது. இதனால் கடுமையான வெயில் காரணமாக ஏற்படும் புழுக்கத்தால் அங்கு வரும் பொதுமக்கள் காற்றின்றி அவதிப்பட்டு வருகின்றனர். அங்கு பணியில் உள்ளவர்களும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகும் சூழ்நிலை உள்ளது.எனவே சம்மந்தப்பட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை மேற்கொண்டு மழைநீர் ஒழுகா வண்ணம் கட்டிடத்தை சரிசெய்து அங்குள்ள மின் விசிறிகளை பழுது நீக்கி அவைகள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: