தொடர் மழை காரணமாக ரோஜா பூங்காவில் பூக்கள் உதிர்ந்தன

ஊட்டி, அக். 10: தொடர் மழை காரணமாக ஊட்டி ரோஜா பூங்காவில் பூக்கள் உதிர்ந்தன. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.  ஊட்டியில் செப்டம்பர், அக்ேடாபர் மாதங்களில் இரண்டாவது சீசன் கடைபிடிக்கப்படுகிறது. இச்சமயங்களில் கேரளா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள், தேனிலவு தம்பதியர்கள் வருகை புரிவதை காண முடியும். இந்த ஆண்டு கேரளாவில் பெய்த கனமழை காரணமாக வயநாடு உள்ளிட்ட பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கேரளா சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்தது. அதன் பின் அவ்வப்போது இதமான காலநிலை நிலவியதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இந்நிலையில் இந்த ஆண்டு ஆயுதபூஜை, விஜயதசமி மற்றும் வார விடுமுறை என 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்தது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்தனர்.

  தற்போது மேகமூட்டத்துடன் கூடிய குளு குளு காலநிலை நிலவியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். 4 நாட்கள் விடுமுறை நிறைவடைந்த நிலையில் நேற்று முன்தினம் மாைல முதல் கூட்டம் குறைய துவங்கியது. இருப்பினும் நேற்று ஊட்டியில் உள்ள சுற்றுலா தளங்களில் கூட்டம் காணப்பட்டது. ஊட்டி விஜயநகரம் பகுதியில் உள்ள தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஊட்டியில் அடிக்கடி பெய்து வரும் மழை காரணமாக பூங்காவில் உள்ள பெரும்பாலான செடிகளில் பூக்கள் உதிர்ந்து காணப்பட்டது.  இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

Related Stories: