அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு துணை முதல்வர் ஆறுதல்

திண்டிவனம், அக்.   10:  திண்டிவனம் மொட்டையன் தெருவில் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் வசித்து வருகிறார். அதே வீட்டில் அமைச்சரின் தங்கை மகன் லோகேஷ் குமார்(26) என்பவரும் வசித்து வந்தார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  பிரேத பரிசோதனை பின்னர் அவரது உடல் அமைச்சரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

Advertising
Advertising

அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஆட்சியர், அரசு அதிகாரிகள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.  இந்நிலையில் நேற்று திண்டிவனத்துக்கு வந்த துணை முதல்வர் பன்னீர்செல்வம் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் வீட்டிற்கு சென்று  அமைச்சர் மற்றும் அவரது அண்ணன் ராதாகிருஷ்ணன் ஆகியோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.  அப்போது அவருடன் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி ஆகியோர்

உடனிருந்தனர்.

Related Stories: